Gratuit avec l'essai de 30 jours
-
Chuttigale, Koyilukku Pogalama? [Kids, Shall We Go to the Temple?]
- Narrateur(s): Sri Srinivasa
- Durée: 3 h et 41 min
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Acheter pour 2,94 $
Aucun mode de paiement valide enregistré.
Nous sommes désolés. Nous ne pouvons vendre ce titre avec ce mode de paiement
Description
கோயிலுக்கு ஏன் போகவேண்டும், பொதுவாக கோயிலுக்குள் இருக்கும் சந்நதிகள், அங்கிருக்கும் கடவுளர்கள், அவர்களுடைய தாத்பர்யங்கள், சிறுவர்களின் கேள்விகளுக்கு, தாத்தா பதில் சொல்லும் வகையில் அமைந்த புத்தகம். பெரியவர்களுடைய சில சந்தேகங்களுக்கும் தெளிவு பெறலாம்.
கோயிலுக்குள் போவதற்கு முன்னால்......
கோயில் இல்லா ஊரே இப்போது எதுவும் இல்லை என்றே சொல்லலாம். பக்தர்களின் எண்ணிக்கையும் இப்போது கோயில்களில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆன்மிக விஷயங்களைப் பற்றி பல பெரியவர்கள் வழி வழியாகத் தமக்குத் தெரிந்த தகவல்களை அடுத்த தலைமுறையினருக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். புத்தகங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, இன்டர்நெட் போன்ற பலவகை தகவல் தொடர்பு சாதனங்கள் பிற எல்லா விஷயங்களையும் தெளிவாக விளக்குவதுபோல ஆன்மிக விஷயங்களையும் விரிவாகவே அலசுகின்றன.
புராணம் என்பது நமக்கெல்லாம் முந்தைய பல நூறு ஆண்டகளுக்கு முன்பு நடந்திருக்கக் கூடிய சம்பவங்களைப் பற்றிய வர்ணனைதான். ஆனால், பெரும்பாலும் வாய்வழியாகவே இந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டு வந்திருப்பதால், ஒவ்வொருவரும் தாம் கேள்விப்படட அந்தத் தகவல்களை அடுத்தவருக்குத் தெரிவிக்கும்போது தம் ஊகங்களுடனும், அந்தந்த காலத்திற்கு ஏற்ற முறையில் மாறுதல்களுடனும் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் பொதுவாக, இப்படிச் சொல்லப்பட்டவையெல்லாம் ஆக்கபூர்வமானதாக, தனிமனித மன வளர்ச்சிக்காக, பொதுவான சமுதாய முன்னேற்றத்துகாகவே உதவின.
இறைவன் என்ற பரம்பொருளின் சக்தி, இயற்கையாகவே இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இந்த சமூகத்தில் ஓர் அங்கமாகப் பிறந்திருக்கும் நாம், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இந்த சமுதாயத்திடமிருந்தான் பெறுகிறோம். உணவு, இருப்பிடம், படிப்பு, வேலை, திருமணம், குடும்பம், மருத்துவம், போக்குவரத்து மற்றும் பிற வசதிகள் என்று எல்லாவற்றையும் நாம் சமுதாயத்திடமிருந்துதான் பெறுகிறோம். தனி மனிதனாக நம்மால் இதையெல்லாம் சாதிக்கவே முடியாது.
Please note: This audiobook is in Tamil.