Setril Manithargal [Humans in the Mud]
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
0,99 $/mois pendant vos 3 premiers mois
Acheter pour 4,56 $
-
Narrateur(s):
-
Pushpalatha
-
Auteur(s):
-
Rajam Krishnan
À propos de cet audio
ஒரு நாட்டின் முதுகெலும்பே அந்நாட்டின் விவசாயம் தான் கடவுள் என்ற முதலாளியின் ஒரே தொழிலாளி விவசாயி. சங்க இலக்கியங்களில் “வரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர ,என்று உழவின் மேன்மையைப் பற்றி ஒளவைப்பிராட்டியும் 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார்கள். அப்படிப்பட்ட உழவுத்தொழில் புரியும் நம் விவசாயிகளின் நிலை தற்ப்போது என்ன?
இப்புதினத்தில் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்கள் சந்திக்கும் பிரட்சனைகளையும், அவர்களின் உழைப்பை சுரண்டும் நிலச்சுவன்தார்களையும் அந்த ஆண்டைகள் தங்கள் பாதுகாப்பிற்க்காக எற்ப்படுத்தி வைத்திருக்கும் மதம், சாதி என்ற சாக்கடைகளையும் அழகாக பிம்ப்படுத்தியிருக்கிறார்.
நாகரிகத்தின் தோற்றத்திற்க்கு காரணம் பயிர்த்தொழிலே அதன் காரணமாக நிலையான குடியிருப்பு ஆரமபமாகியபோது கூடவே “நிலஉடமை” என்ற நில ஆதிக்கம் பிறந்தது அது மனிதர்களிடே உயர்வு தாழ்வை கற்ப்பித்தது மனித சமூதாயத்தை கூறு போடும் எல்லா பிளவுகளும் இங்கிருந்து தான் பிறந்தன நில உடைமை பாராட்டுபவர் உழைப்பிலிருந்து விடுபட்டு, பிறர் உழைப்பை உரிமையாக்கிக் கொள்ளும் நியாயத்தைத் தோற்றுவித்தனர். கூடவே தங்கள் பாதுகாப்பிற்க்காக வருணாசிரமத்தையும் தோற்றுவித்தனர் விவசாயிகள் நால்வகை வருணங்களுக்கு அப்பாலும் தாழ்த்தப்பட்டு, மேற்குலத்தோரின் அடிமைகளாய், சேற்றில் உழன்று தலையாய தொழிலுக்குரிய உழைப்பை நல்குவதற்கே பிறவி எடுத்திருப்பதாகக் கருதச் செய்வது நியாயமாக்கப்பட்டு வந்திருக்கிறது. கரும பயன் - அல்லது முன்வினை என்ற தத்துவங்கள், இத்தகைய அடிமை ஆண்டான் நியாயங்களுக்காகவே நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. உழைப்பாற்றல் மனித வாழ்வில் தலைசிறந்ததென்று மதிக்கப்பெறாத வரையில், கௌரவிக்கப் பெறாத வரையில், சமத்துவம் ஏறக்குறையக் கூடச் சாத்தியமில்லை என்பது தான் உண்மை.
Please note: This audiobook is in Tamil.
©1993 Rajam Krishnan (P)2018 Pustaka Digital Media Pvt. Ltd., India