Épisodes

  • ‘வரலாறு தெரியாத சமூகமாக தமிழ் மக்கள் இருப்பது வருத்தமளிக்கிறது’ – மாத்தளை சோமு
    Nov 20 2025
    மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1
    Voir plus Voir moins
    15 min
  • நாட்டின் வட்டிவீதம் மீண்டும் அதிகரிக்குமா?
    Nov 20 2025
    ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள பின்னணியில் நாட்டின் வட்டிவீதம் மீண்டும் அதிகரிக்குமா என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்காலவியலாளர், நவீன தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் வணிக மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Voir plus Voir moins
    14 min
  • செய்தியின் பின்னணி : புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப அரசு படகுகள் வாங்குகிறதா?
    Nov 20 2025
    அண்மையில், Broome நகரத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு Australian Border Force (ABF) கப்பலில், மாற்றியமைக்கப்பட்ட நான்கு மீன்பிடிப் படகுகள் இருந்தன. இதன்மூலம், நாடு முழுவதும் மீன்பிடிப் படகுகளை வாங்கி மாற்றும் காமன்வெல்த் அரசு திட்டம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    Voir plus Voir moins
    7 min
  • அமெரிக்க அரசியலை பரபரப்பாக்கியிருக்கும் Epstein Files - பின்னணி என்ன?
    Nov 20 2025
    அமெரிக்காவில் Epstein files விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிபர் Donald Trumpஐ தொடர்புபடுத்தி பேசப்படும் Epstein Files என்றால் என்ன, அதன் பின்னணி என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
    Voir plus Voir moins
    9 min
  • ஆண்களைப் பாதிக்கும் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளும் தீர்வுகளும்
    Nov 20 2025
    சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் திகதி கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஆண்கள் தமது உடல்நலனில் மாத்திரமல்லாமல் மனநலனிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதற்கான உதவிக்குறிப்புகளையும் பகிர்ந்துகொள்கிறார் மெல்பனில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் Dr நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Voir plus Voir moins
    15 min
  • சிட்னியில் 12 ஆவது சர்வதேச வர்த்தக மாநாடு!
    Nov 20 2025
    உலக தமிழ் வர்த்தக சபையும் (World Tamil Chamber of Commerce), Greater Cumberland Chamber of Commerce அமைப்பும் இணைந்து 12வது ஆண்டு சர்வதேச வர்த்தக மாநாட்டை சிட்னி நகரில் நடத்துகின்றன. இந்திய அரசு மற்றும் Invest NSW ஆதரவுடன் டிசம்பர் 6 & 7 ஆகிய நாட்களில் Blacktown Leisure Centre, Stanhopeயில் நடைபெறும் இம்மாநாடு குறித்து விளக்குகிறார் Greater Cumberland Chamber of Commerceயின் தலைவர் இம்மானுவேல் செல்வராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
    Voir plus Voir moins
    8 min
  • இன்றைய செய்திகள்: 20 நவம்பர் 2025 வியாழக்கிழமை
    Nov 20 2025
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 20/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
    Voir plus Voir moins
    5 min
  • நாடாளுமன்றில் பெண்களின் உரிமைக்காக குரல்கொடுப்பேன்- சல்மா
    Nov 19 2025
    ராஜாத்தி சல்மா, தமிழ் இஸ்லாமிய பின்னணி கொண்ட கவிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாவார். அண்மையில் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Voir plus Voir moins
    26 min