![Page de couverture de Aagayathil Aarambam [The Beginning in the Sky]](https://m.media-amazon.com/images/I/41HxsPawNTL._SL500_.jpg)
Aagayathil Aarambam [The Beginning in the Sky]
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Acheter pour 2,94 $
-
Narrateur(s):
-
Pattukottai Prabakar
-
Auteur(s):
-
Pattukottai Prabakar
À propos de cet audio
இதுவரை நான் எவ்வளவோ கிரைம் நாவல்கள் எழுதியிருந்தாலும், என்னைப் புதிதாகச் சந்திக்கிற வாசகர்கள் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசும் சில நாவல்களில் ’ஆகாயத்தில் ஆரம்பம்‘ ஒரு நாவல்.
‘கிரைம் கதைகள் படிக்கும்போது அதில் குற்றம் செய்பவர்கள் பயன்படுத்தும் யுக்திகளைப் பார்த்து அதேப்போல மக்கள் குற்றம் செய்ய மாட்டார்களா? குற்றம் செய்பவர்களுக்கு வழிமுறைகளைக் கற்றுத் தருவது போலாகாதா?’
இந்தக் கேள்வி என்னையும், என் போன்று கிரைம் கதைகள் எழுதுகிற எழுத்தாளர்களையும் எல்லாப் பேட்டிகளிலம் தவறாமல் கேட்கப்படும் கேள்வி.
ஒரு தொலைக்காட்சி பேட்டியில் என்னைக் கேட்டபோது நான் சொன்ன பதில்:
“இன்றைக்கு சினிமாவும், தொலைக்காட்சியும் மக்களை முழுமையாக ஆக்கிரதித்துக் கொண்டுள்ளன. அவைகளில் காட்டப்படும் விஷயங்களைவிட பெரிதாக எழுத்தில் சொல்லி விடுவதில்லை. நாட்டில் எந்தக் குற்றம் நிகழ்ந்தாலும் பத்திரிகைகளில் விரிவாக செய்திகள் போடுகிறோம். தொலைக்காட்சிகளில் காட்டுகிறோம். உதாரணமாக ஒரு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் சிலர் ரகசியமாக சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றார்கள். அந்த சுரங்கத்தை புகைப்படம் எடுத்து அம்புக்குறி போட்டு எப்படித் தப்பினார்கள் என்று விரிவான விளக்கம் பத்திரிகைகளில் வந்தது. இதுவே தொலைக்காட்சி செய்திகளில் காட்டப்பட்டு காவல்துறை அதிகாரிகள் நடித்துக் காட்டினார்கள். இதைப் பார்க்கும், படிக்கும் கைதிகள் சுரங்கம் தோண்டி தப்பிக்கலாம் என்று தூண்டப்பட்டால்? அதற்காக செய்தியை மக்களிடம் மறைக்க முடியுமா? நடக்கும் சம்பவங்களை அப்படியே சொல்ல வேண்டியது மீடியாக்களின் கடமை. அதனால் கதைகள் படித்து குற்றம் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள் என்பது நியாயமில்லாத குற்றச்சாட்டு!"
Please note: This audiobook is in Tamil.
©2010 Infaa Alocious (P)2012 Pustaka Digital Media Pvt. Ltd.